மக்கும் குப்பை – மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும் என துணை முதல்வர் கூறியுள்ளாா்.தூய்மை என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு என துணை முதல்வர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
மேலும் தனது பதிவில், நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட ‘தூய்மை_Mission’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்! நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை – மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்! என பதிவிட்டுள்ளாா்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது – அன்புமணி