spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

we-r-hiring

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி

உதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 05) நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் தேவை. தமிழகத்தில் இளைஞர்கள் பட்டப்படிப்புக்கு ஏற்ப வேலை வாய்ப்பின்றித் தவிக்கின்றனர். தேவைக்கேற்ப கல்வியை வழங்க முடியாத சூழல் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகம் நல்ல நிலையில் இருந்தாலும் தொடர் சரிவையும் சந்தித்து வருகிறது. அடுத்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர், அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். நாம் கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!

உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே அதற்கான சிறந்த வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ