பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி
செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள். விழுந்து வணங்கி இவற்றை செய்ய உங்களுக்கு தெரியும், எனக்கு விழுந்து வணங்க தெரியாது. எல்லாம் தெரியும் என நினைப்பவர்களால் இந்தியா ஆளப்படுகிறது. உலகம் எப்படி செயல்படுகிறது என மோடி விளக்கினால் கடவுளே குழப்பமாகி விடுவார். இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும்
உதவியற்று நிற்கின்றனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவையெல்லாம் என்னை முன்னோக்கி செல்லவே வைத்தது. ஒரு வேளை உங்களுக்கு கோபம், வெறுப்பு, கர்வம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், நீங்கள் பாஜக கூட்டத்தில் இருந்திருப்பீர்கள். இன்று இந்தியாவில் ஏழைகளுக்கும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர். இந்தியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள். ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம்தான், வெறுப்பை பரப்பிவிடுகிறது. 1980-களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ, அதுவே இன்று இந்தியாவில் முஸ்லீம்களுக்கு நடக்கிறது” என்றார்.


