Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

முதலில் சிங்கப்பூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன், கா.சண்முகம் ஆகியோரைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார். இதில், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்யுமாறு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, டோக்கியோவுக்கு சென்ற முதலமைச்சர், பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இதில் ஜப்பான் நிறுவனங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.கஸ்டாலின் நேற்று (மே 31) இரவு தமிழகம் திரும்பினார்.

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

MUST READ