Homeசெய்திகள்தமிழ்நாடுஅழகுமுத்துகோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் - மு.க.ஸ்டாலின்

அழகுமுத்துகோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் – மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

அழகுமுத்துகோன் வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய பிறந்தநாளில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 314ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  சென்னை எழும்பூரில் உள்ள அழகு  முத்துக்கோனின் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பக்கத்தில், “பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் #அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ