
தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!
கோவை மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், படுகாயமடைந்த இரண்டு தொழிலாளர்கள், ஆபத்தான நிலையில் கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை உயரதிகாரிகள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுச் செய்தனர்.
நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை அறிவிப்பு!
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட காவல்துறையினர், விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமானப் பணியில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஆந்திர மாநில தொழிலாளர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.