
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
எஸ் வங்கியின் அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அனில் அம்பானியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. சுவிஸ் வங்கிக் கணக்கில் 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்தும், அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முன்பு அனில் அம்பானி நேரில் ஆஜரானார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பல்வேறு கேள்விகளை எழுப்பி அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுச் செய்தனர்.
பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
தொழில் போட்டி காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இந்த நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.