Homeசெய்திகள்தமிழ்நாடுகணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

-

- Advertisement -

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO/TNPDCL) கணினி தரவு மேம்படுத்தும் (Data Upgradation/Migration) பணிகள் காரணமாக, உயர் அழுத்த (HT) மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் மே 28 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கணினி தரவு வழங்கிகள் மேம்பாடு: உயர் அழுத்த மின் நுகர்வோருக்கான இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

we-r-hiring

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) நுகர்வோர்களுக்கான தனது சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘கணினி தரவு வழங்கிகளை’ (Computer Data Servers) படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. ​இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக, இணையதள சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

​தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இந்த கணினி தரவு வழங்கிகள் மேம்பாட்டுப் பணி காரணமாக, உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கான (High Tension – HT Consumers) இணையதள சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படவுள்ளன. அதன்படி, 28.05.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின் இணைப்புக்கான சேவைகள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

​”எனவே, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் இந்த சேவை முடக்க நேரத்திற்கு ஏற்ப தங்களது பணிகளை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தற்காலிக இடையூறுக்கு வருந்துகிறோம்.” என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

MUST READ