spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் ம.நீ.ம. போட்டி?

காங்கிரஸுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் ம.நீ.ம. போட்டி?

-

- Advertisement -

 

Photo: kamal haasan official twitter page

காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஆபரேஷன் லைலா’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தி.மு.க. தலைமை அறிவித்துள்ள தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் மக்களவைத் தொகுதிகளில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இரண்டு (அல்லது) ஒரு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

அத்துடன், கைச் சின்னத்தில் கூட கமலை நிற்க வியக்க காங்கிரஸ் கட்சிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்ப உள்ள நிலையில், தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ