Homeசெய்திகள்தமிழ்நாடுஇறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுகடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே 25 மாணவிகளுடன் பயணித்த கல்லூரி பேருந்தை அப்பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற நபர்கள் சிலர் மதுபோதையில் தடுத்து நிறுத்தி, மாணவிகளை தவறான வார்த்தைகளால் திட்டி, ஓட்டுநரை  தாக்கியதோடு, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காரணமாக சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் இவா்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், “இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை.  இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ள இயலாது. இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்பது ஒரு சமூக நடைமுறை என்றாலும், அது பொதுமக்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் உரிமையை வழங்க இயலாது. எனவே இந்த வழக்கில் விசாரணை அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

we-r-hiring

பொதுவாக இது போன்ற இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை அதிகரித்து வருவது நீதிமன்றத்திற்கு கவலை அளிக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில், காவல்துறை தரப்பில் இறுதி ஊர்வலத்திற்கு முன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், சாலையில் மலர்கள் அகற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் இறுதி ஊர்வலங்களின் போது ஒழுங்கற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். ஆகவே  இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்துவதற்கு போதுமான கட்டுப்பாடு மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கிய சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை குறித்து தமிழக முதன்மை செய்த ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை ஜூலை 31 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது.

அதே சமயம் இறுதி சடங்குகளை நடத்தும் அடிப்படை உரிமை தேவையற்ற வகையில் குறைக்கப்படவில்லை என்பதையும் அது உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

MUST READ