Homeசெய்திகள்தமிழ்நாடு”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

-

- Advertisement -

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 23ம் தேதி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு தொடர் சூறாவளி பிரசார பயணம் மேற்கொண்ட முதல்வர், சிறிய ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த 25ம் தேதி சென்றிருந்தாா்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்று தங்கினாலும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி கொடைக்கானலில் நேற்று (26ம் தேதி) அதிகாலை நடைப்பயிற்சி செய்தார்.  அப்சர்வேட்டரி அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தேக்கத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையில் காலை 6.45 மணியளவில் முதல்வர் நடைப்பயிற்சியை தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

we-r-hiring

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மனோரஞ்சித நீா் தேக்கத்தில் நடைபயிற்சி முடித்து திரும்பிய முதல்வருக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பூங்கொத்து கொடுத்தும், கைகளை குலுக்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.  அப்போது அவா்களிடம் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டறிந்தாா்.

மேலும், ஸ்டாலின் தொடரட்டும் பாடலை சிறுமி ஒருவா் பாடியுள்ளாா். மீண்டும் பாட சொல்லி கேட்டு மகிழ்ந்த அவரிடம்  தோ்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என அச்சிறுமி கூறியள்ளாா். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதிக்கு திரும்பினார்.

நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்

 

MUST READ