- Advertisement -
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது, “மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடல். அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்” என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

