சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 85% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட இப்பணி நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தகட்ட நடவடிக்கைகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள், தற்போதைய சூழல் என பல்வேறு விவரங்களை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா்.
