Homeசெய்திகள்தமிழ்நாடுசசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்!

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்!

-

 

sasikala

சசிகலா மற்றும் இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

“சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, சிறையில் சொகுசு வசதிக்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!

அந்த வகையில், இந்த வழக்கு நேற்று (செப்.04) விசாரணைக்கு வந்த போது, சசிகலா, இளவரசி தரப்பில் யாரும் ஆஜராகாததால், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் அக்டோபர் 05- ஆம் தேதி சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ