சனாதன ஒழிப்பைத் தொடர்ந்து சொல்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“சேகர்பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்பேன். பெண்களை அடிமைப்படுத்திய உடன்கட்டை ஏறுதல் போன்ற கருத்துகளைக் கொண்டதே சனாதனம்.
நான் பேசியதில் தவறே இல்லை என்று தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் பேசியதில் தவறே இல்லாத போது, அமைச்சர் சேகர்பாபு ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? எந்த மதமாக இருந்தாலும், சரி அதில் சமத்துவம் இல்லை எனில், அது ஒழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
படுகொலையான 4 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில ஆளுநர்கள், மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.