
பல்லடத்தில் படுகொலைச் செய்யப்பட்ட நான்கு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (செப்.03) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, (வயது 69), ரத்தினாம்பாள் (வயது 58), மோகன்ராஜ் (வயது 45), செந்தில்குமார் (வயது 48) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


