spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது"- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. பேட்டி!

“தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. பேட்டி!

-

- Advertisement -

 

"தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது"- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. பேட்டி!

we-r-hiring

தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீடுக்கென அமைக்கப்பட்ட குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று (பிப்.29) காலை 10.00 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் எம்.பி., “தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நாங்கள் ஏற்கனவே வென்ற இரண்டு தொகுதிகளைக் கேட்டுள்ளோம். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

நான் இந்திரா காந்தி, ஜெயலலிதாவின் பிரண்டு…..கவனம் இருக்கும் ஊர்வசியின் ‘J. பேபி’ பட ட்ரெய்லர்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுக் கட்டத்தை எட்டியிருக்கிறது. எங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தையில் இசைவு ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ