Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்

ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்

-

- Advertisement -

ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்

முதல்வர் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவு செய்ததற்காக கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகி ஜெய்குமாரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!
File Photo

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள், “கருத்து சுதந்திரத்தை கழுத்தை நெரிக்கும் விதத்தில் திராவிட மாடல் அரசின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினரால் கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம் ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்களை இரவோடு இரவாக கைது செய்தது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். பாரதப் பிரதமர் மோடி அவர்களைப் பற்றியும் பாஜகவின் தலைவர்கள் பற்றியும் அவதூறு செய்திகளை பரப்பும் போதெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை தற்போது கருத்து கூட தெரிவிக்க விடாமல் கைது செய்தது.

அதிகாரம் தங்களின் கையில் இருப்பதாலே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கின்றனர். கண்டிப்பாக பாஜகவின் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ