Homeசெய்திகள்தமிழ்நாடுஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

-

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

NLC

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளையமாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம், அங்கு 30-க்கும் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பதை கண்டு விவசாயிகள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.

கடலூர் ஆட்சியர்

இந்நிலையில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிரிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாகவும், பணி தொடங்குவரை பயிரிட்டு கொள்வதாக விவசாயிகள் கேட்டுக்கொண்டதாலேயே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

MUST READ