ஓபிஎஸ்-ஐ நாங்கள்தான் மூன்று முறை நாற்காலியில் அமர வைத்தோம் என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாள் விழாவை தொடர்ந்து அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி,சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,” ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள்தான் அதாவது அமைச்சர்கள் ஒன்று இணைந்து மூன்று முறை நாற்காலியில் அமர வைத்தோம். ஆனால், அதிமுக கட்சி அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடுவதற்கு ஓ பன்னீர்செல்வம் துணை போய் இருக்கிறார். அவர் ஒரு அடியாள், எச்சக்கலை. ஏற்கனவே அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் ஓ. பன்னீர்செல்வம். காரணம் மீண்டும் இந்த சின்னத்தை முடக்குவதற்கு அடியாளாக செயல்பட்டு வருகிறார்.
திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார். அது துரைமுருகனாகவோ, கனிமொழியாகவோ கூட இருக்கலாம். திமுக டெல்லியில் பதவிக்காக பிச்சை எடுக்கிறது.” எனக் கூறினார்
