spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெஞ்சல் புயல் - தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

ஃபெஞ்சல் புயல் – தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

-

- Advertisement -

ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக நிதி உதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

we-r-hiring

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், கடலுர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்தது. மழை வெள்ளம் காரணமாக ஏரளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.2,000 கோடி நிதி வழங்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும்  ஒன்றிய அரசின் நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று மத்திய குழு தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை அழகாக வேண்டும் -  பிரதமர் நரேந்திர மோடி

இந்த நிலையில், மத்திய அரசு பெஞ்சல் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.  மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சேத மதிப்பீட்டுக்குழு அறிக்கை அளித்த பின்னர் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ