Homeசெய்திகள்தமிழ்நாடு"புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

 

"அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: DMK

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவை

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும். புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சம் தரப்படும்.

புயல் வெள்ளத்தினால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 8,000 தரப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ரூபாய் 17,000 வழங்கப்படும். 33 விழுக்காட்டிற்கு மேல் சேதமான இறவைப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17,000 வழங்கப்படும் மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 7,410- லிருந்து ரூபாய் 8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூபாய் 4,000 வழங்கப்படும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூபாய் 37,500 வழங்கப்படும் முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ