spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமிக்ஜாம் புயல்- தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு!

மிக்ஜாம் புயல்- தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு!

-

- Advertisement -

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

we-r-hiring

ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்…. இதுதான் ரிலீஸ் தேதியா?

கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூபாய் 397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூபாய் 285 கோடி மிக்ஜாம் நிதியில் ரூபாய் 115 கோடியும், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் பெய்த மழை வெள்ள பாதிப்புக்கான ரூபாய் 397 கோடியில் ரூபாய் 160 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 160 கோடி நிதியானது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெள்ள நிவாரணமாக ரூபாய் 160 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு கடுமையாக விமர்சித்து வந்தார். அத்துடன், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்து வந்தனர்.

அஜித் பிறந்தநாளில் ரீரிலீஸ் ஆகும் மற்றுமொரு படம்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இந்த சூழலில் தான் மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ