
சென்னை திருவொற்றியூரில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “மழை, வெள்ளம் காரணமாக, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. புயல் எச்சரிக்கைக்கு பின் முதலமைச்சர் மெத்தனமாக இருந்ததால், மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கனமழை பெய்த போது, திட்டமிட்டு செயல்பட்டோம். கடந்த 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. டெபாசிட் கூட வாங்காது; அந்த அளவிற்கு மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளுக்கு உரிய உதவிகள் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.