spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேட்டில் இருந்து தினசரி திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் - போக்குவரத்து துறை தகவல்

கோயம்பேட்டில் இருந்து தினசரி திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் – போக்குவரத்து துறை தகவல்

-

- Advertisement -

சிறப்பு பேருந்து

வருகிற 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும். . சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பெருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

MUST READ