spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு

-

- Advertisement -

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு

மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

we-r-hiring

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்., 6 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பிளஸ் 2 மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்., 13 நள்ளிரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்து, நீட் நுழைவு தேர்வு முதுநிலை இயக்குனர் சாதனா பரஷார் உத்தரவிட்டார். அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் நேற்று இரவுடன் நிறைவடைய இருந்த நிலையில், நாளை வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுளது. அதன்படி, neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை நள்ளிரவு 11.30 வரை விண்ணப்பிக்கலாம். 11.59க்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

 

 

MUST READ