

டெல்லியில் சைடோபெட்ரைன் என்கிற போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
மேற்கு டெல்லியின் பாஸாய் தாராப்பூரில் உள்ள குடோன் ஒன்றில் 50 கிலோ எடையுள்ள சைடோபெட்ரைன் என்கிற பொருளை டெல்லி சிறப்பு காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். சத்துமாவிற்குள் மறைத்து வைத்து இந்த போதைப்பொருளைக் கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் யார் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை.
பாலா, அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’…… ரிலீஸ் எப்போது?
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ மெத்தாபெட்டமைன் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்த போதைப்பொருளைப் பெற்ற கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.


