Homeசெய்திகள்தமிழ்நாடுதிரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரிக்கை

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரிக்கை

-

- Advertisement -

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராமசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறைந்த செலவில் தரமான படங்களை தயாரிக்கும் தமிழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பாக 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2015,16,17 ஆகிய மூன்று ஆண்டிற்கான மானியத்திற்காக விண்ணப்பித்திருந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானியத்தொகையினை விரைந்து வழங்கக்கோரியும், அதனை தொடர்ந்து 2018,19,20,21 ஆகிய நான்கு வருடங்களில் வெளியான திரைப்படங்களில் தரமான படங்களை பார்த்து தேர்வு செய்திட குழு அமைத்து அதற்கான மானியத்தொகையை வழங்கிட கோரியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

we-r-hiring

இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெறிவித்ததாக தகவல் தெறிவித்தார்.

MUST READ