Homeசெய்திகள்தமிழ்நாடுஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

-

- Advertisement -

ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்துர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

'சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை'- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
File Photo

இந்த நிலையில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை  4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி  கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை  அறிவித்திருந்தது. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டு உளளது. இரவில் மலையில் தங்கவும், நீரோடைகளில் குளிக்கவும் அனுமதி இல்லை என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த நிலையில், இன்று ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அடிவாரம் தாணிப்பாறை பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு சதுரகிரி கோயில் நுழைவு வாயில் திறக்கப்பட்ட நிலையில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

MUST READ