spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதர்மபுரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

தர்மபுரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

தர்மபுரி நான்கு வழிச்சாலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய அவர், கொலை, கொள்ளை, சாதிய இழிவு தீண்டாமை ஒடுக்குமுறை, மதுமத போதை, பெண்மை அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை இது ஏதுமற்ற ஒரு தூய தேசம் படைக்க துடிக்கிறோம். எங்கள் கண்முன்னே எங்கள் நிலத்தின் வளங்கள் களவு போகிறது. காட்டு வளம், கனிம வளம், நீர்வளம், நிலவளம், மழைவளம், கடல்வளம், இவற்றையெல்லாம் காப்பது ஒவ்வொரு மகனின் கடமை என்கிற புரிதலோடு இந்த களத்திற்கு வந்தோம். கல்வி கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம் அதைக் கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு அதுவே எங்கள் கனவு என்று இந்த களத்திற்கு வந்தோம்.

நம் தாய் நிலத்திலே எண்ணற்ற வளங்கள் இருந்தும் நாம் ஏழ்மை வருமையில் சிக்கி தவிக்கிறோம். உங்கள் பிள்ளைகள் நாங்கள் பெரும் கனவை கொண்டோம் அதிலே வேளாண்மை என்பது தொழிலல்ல. அது நம் பண்பாடு, நம்முடைய வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆதியிலிருந்து நாம் செய்து வந்த ஒரு பண்பாடு அது. இந்த வேளாண்மையை விட்டு வெளியேறுகிற ஒரு கொடும் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என் அன்பு மக்கள் இவற்றை ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும். எனக் கூறினார்.

MUST READ