Homeசெய்திகள்தமிழ்நாடுதுருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் நிபந்தனை!

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் நிபந்தனை!

-

 

துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “நடிகர் சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற திரைப்படத்தை இயக்க ரூபாய் 2.40 கோடி பெற்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், படத்தை முடிக்கவில்லை. எனவே, பணத்தைத் திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (நவ.23) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இரண்டு மாதம் முன்பே துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் கடைசி நேரத்தில் தடைக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்!

இதனை நிராகரித்த நீதிபதி, ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூபாய் 2 கோடியை நாளை (நவ.24) காலை 10.30 மணிக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டு நீதிபதி, நாளை காலைக்குள் பணத்தை வழங்கவில்லை என்றால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

MUST READ