spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!

கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!

-

- Advertisement -

 

கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!

we-r-hiring

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனகசபை மீது பக்தர்களை ஏற்றும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, கனகசபை மீது ஏறி வழிப்படப் பக்தர்களுக்கு தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் பக்தர்களை கனகசபை மீது ஏற்றுவதற்காக, அறநிலையத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். சில பக்தர்கள் கனகசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தங்களை அனுமதிக்கக் கோரி முழக்கமிட்டனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பின்புற வாயில் வழியாக சென்று, கனகசபை மீது ஏறி வழிபட்டதாக தீட்சிதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீட்சிதர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ