

குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையைப் பெறுவதற்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள தகவல்களை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உரிமைத் தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டையைப் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் புதிய குடும்ப அட்டையைப் பெறுவதற்கு தமிழக அரசுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் முழுமையாகப் பெறும் வரை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கும், புதிய குடும்ப அட்டைகளுக்கு அனுமதியும் வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!
அதே நேரம் பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்தால் அதனை பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
