Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா

பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா

-

பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா

சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் பிரேமலதா நடைபெற்றது.

Image

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் முடிவெடுப்பார். கூட்டணியில் இல்லாததாலேயே டெல்லி கூட்டத்திற்கு பாஜக அழைக்கவில்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது, மக்களின் நிலை மாறவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
டெல்டாவில் கருகும் பயிர்களை காக்க திமுக அரசால் தண்ணீரைப் பெற்றுத்தர முடியவில்லை. டெல்டாவில் கருகும் பயிர்களை காக்க திமுக அரசால் தண்ணீரைப் பெற்றுத்தர முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடையே முரண்பாடு உள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடரக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாகிவிடும். தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ரூ.1,000 என்பதை அனைத்து பெண்களும் எதிர்க்கின்றனர். ஆகவே அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. விஜயகாந்த் வழியில் விஜய் வந்து மக்களுக்கு நல்லது செய்தால் வரவேற்போம். மணிப்பூரில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் பெண்களுக்கே தலைகுனிவு. வெளிநாடுகளுக்கு செல்லும் மோடி, உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்” என்றார்.

MUST READ