spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இணைகிறார்?

தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இணைகிறார்?

-

- Advertisement -

 

Photo: kamal haasan official twitter page

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளன என்று தி.மு.க.வின் செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுவை பெற்றுக் கொண்ட போது, அவர் இதனை தெரிவித்தார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை தி.மு.க. இன்று தொடங்கியது. அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்றது.

பிரபல பாலிவுட் பாடலாசிரியருக்கு ஞானபீட விருது அறிவிப்பு

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தேர்தல் ஒருங்கிணைப்புப் பணி, தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் கவனம் செலுத்தி வரும் தி.மு.க., அக்கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகத்தை இன்று தொடங்கியது.

தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் இணைகிறார்?

இதில் தூத்துக்குடி, தஞ்சாவூர், சென்னை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.

திமுகவின் செய்தித் தொடர்பு குழுத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான, டி.கே.எஸ்.இளங்கோவன் தமக்கான விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். ஏற்கனவே இருந்த கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி மட்டும் விலகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுய கதையில் சஞ்சனா… போர் குறித்து சுவாரஸ்ய பேச்சு…

மேலும், விருப்ப மனு விநியோகம் பற்றி பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்ற எண்ணத்தோடு உள்ள தி.மு.க.வினர், விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் பெற்றுச் செல்வதாகக் கூறினார்.

பூர்த்திச் செய்யப்படும் விண்ணப்பங்களை வரும் மார்ச் 1- ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி நாள், மார்ச் 7-ஆம் தேதி என்று தி.மு.க. ஏற்கனவே அறிவித்துள்ளது. தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி போட்டியிட வேண்டும் என்பதற்காக 32 விருப்ப மனுக்கள் இன்று (பிப்.19) மதியம் வரை தி.மு.க.வினர் வாங்கியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ