Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

-

தி.மு.க.- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வருகிறது!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ