Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

“ஆளுநர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!

வரும் ஜனவரி 21- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ஆளுநர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது. ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக உள்ளனர். ஆளுநர்களை வைத்து போட்டி அரசை நடத்த நினைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. இருண்ட காலத்தில் இருந்து இந்தியாவை மீட்பதற்கான முன்னெடுப்புகளை இந்தியா கூட்டணி தொடங்கியுள்ளது.

திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லோர் மீதும் காவிச்சாயம் பூசுகின்றனர். மத்திய ஆட்சியாளர்களே ஆன்மீக உணவுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுகின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து, தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளை, அதன் பண்பாட்டை சிதைக்க முயற்சி செய்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

மத்திய அரசு செய்யும் மூர்க்கத்தன அரசியலை ஜநாயக வழியில் முறியடிக்கும் வலிமை தி.மு.க.வுக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ