Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி

இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி

-

இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்: திமுக எம்.பி கனிமொழி

உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi

இது தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தந்து மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேறும் என நினைத்தோம். ஆனால் பாஜக இதை அரசியல் லாபத்திற்காக செய்கிறது. தேர்தல் வாக்குறுதியில் பாஜக இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக கூறியிருந்தாலும், பல தலைவர்கள் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியதாக இருந்தது. எப்போதும் ஒரு மசோதாவை கொண்டுவர அனைத்து கட்சிகள் மற்றும் தரப்புகளின் கருத்துக்களை பெற வேண்டும் என்று சொல்வார்கள். இந்த முறை யார் கருத்தை கேட்டிருக்கிறார்கள்? எதற்காக இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்று யாருக்கும் தெரியாது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இது பற்றி தெரிவிக்கவே இல்லை. திடீரென இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளார்கள். இப்படி தான் இந்த அரசு செயல்படப்போகிறதா? ஆனாலும் இந்த மோசாதவை கொண்டுவந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, சில நிமிடங்களிலேயே மற்ற சகோதரிகளின் மனது நொறுங்கியது போல, என் மனமும் நொறுங்கி மகிழ்ச்சி காணாமலேயே போய்விட்டது. இந்த மசோதாவை அமல்படுத்த கூடுதல் காலம் காத்திருக்க வேண்டும் என்று சொன்னதே அதற்கு காரணம்.

கனிமொழி

இந்த மசோதாவுக்கு நாரி சக்தி வந்தன் மசோதா என பெயரிட்டுள்ளார்கள். உங்களிடம் எங்களுக்கு வணக்கம் வைக்க நாங்கள் சொல்லவில்லை, எங்களுக்குரிய மரியாதையை கொடுங்கள் என்றே கேட்கிறோம். சமமாக மதித்தாலே போதும் என்கிறோம். உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு. இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான்” என்று தெரிவித்தார்.

MUST READ