Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவை தேர்தல் 2024 - திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்!

மக்களவை தேர்தல் 2024 – திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்!

-

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, ஆரணி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.

 

MUST READ