Homeசெய்திகள்தமிழ்நாடுசமூக வலைதளங்களில் லைக், ஷேர் செய்ய கூடாது! விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் லைக், ஷேர் செய்ய கூடாது! விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

-

- Advertisement -

சமூக வலைதளங்களில் லைக், ஷேர் செய்ய கூடாது! விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் கண்ணியம் தேவை என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்க ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக், ஷேர் செய்ய கூடாது. எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் அரசியல் சமூக தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரிகத்துடனும், ஆதாரங்கள் அடிப்படையிலும் கருத்தியலாகவும் கண்ணியமான வார்த்தைகளும் பயன்படுத்தி இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீப காலமாக அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 15ஆம் தேதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாலை நேர பயிலகங்களை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ