Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது - திருச்சி சிவா...

தமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது – திருச்சி சிவா பெருமிதம்

-

- Advertisement -

கூட்டாட்சி தத்துவத்தை காக்கும், மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு வெற்றி என எதிர்கட்சி தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளாா்.தமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது - திருச்சி சிவா பெருமிதம்இது குறித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருச்சி சிவா வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெண்கள் இட ஒதுக்கீடு பாஜனதாவின் கண்துடைப்பு அரசியல் நாடகம். தற்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 75 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இது மொத்த விகிதாசாரத்தில் வெறும் 14 சதவீதம் மட்டுமே. தற்போது இருக்கும் இடங்களிலேயே 33 சதவீதம் இடஒதுக்கீட்டை உடனடியாக உறுதி செய்ய இந்த அரசுக்கு துணிவில்லை.

மாறாக, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், மாநிலங்களின் மக்கள் தொகையை கணக்கில் வைத்து இடங்களை அதிகரித்து, அதன் பிறகு இடஒதுக்கீடு வழங்குவோம் என்பது ஆதிக்கவாதிகளின் மோசடித் திட்டம். இது பெண்களின் உரிமையை வழங்காமல் காலங்கடத்தும் தந்திரம் மட்டுமல்லாது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பலத்தைக் குறைக்கும் ஒரு சதியுமாகும்.

we-r-hiring

தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காண தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்கும் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசியல் உரிமைக்கு எதிரான சதி திட்டம் முறியடிக்கப்பட்டது – தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு குவிகிறது…

 

MUST READ