ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.
குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு, “செல்பெருந்தகைக்கு செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பு உள்ளது. முதல்வர் சொல்கிறார் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெறும். தொகுதி மறுவரையறை தோல்விக்கு பின் மிகப்பெரிய எழுச்சி உள்ளது என்றார். அந்த எழுச்சி ஒரு பிரமாண்டமான வெற்றியை உண்டாக்கும் என்றார்.
நான் ஒரு வேட்பாளர் சுகந்திரமாக நடமாட வேண்டும். காலை முதலே மொழி தெரியாதவர்கள் எனது வீட்டிலும் எனது உணவினர் வீட்டிலும் சோதனை செய்தனர். ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். திமுக ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வீட்டில் நுழைந்து பீரோவை உடைப்பது, பெட்டை கிழிப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினர் வேட்பாளருக்கு ஏன் இப்படி நடப்பதில்லை. அவர்கள் பாஜகவின் பின்னால் ஒளிந்து கொண்டு இருகின்றனர். ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது.

இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துகின்றனர். வேதனை ஏற்படுத்துகின்றனர் என வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்துள்ளாா்.
ரூ.25,000 பணம்…வெள்ளை தாலில் சில பெயர்கள் – அதிமுக பிரமுகரை மடக்கி பிடித்த பறக்கும் படை…
