Homeசெய்திகள்தமிழ்நாடுமதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாா். குமரி மாவட்டத்தில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டைக்காடு அருகே உள்ள லெட்சுமிபுரம் கலைக் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி வருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் (கிள்ளியூர் தொகுதி) ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட் (குளச்சல் தொகுதி), பிரவீன் (விளவங்கோடு தொகுதி), தி.மு.க. வேட்பாளர்கள் மகேஷ் (கன்னியாகுமரி தொகுதி, ஆஸ்டின் (நாகர்கோவில் தொகுதி) மற்றும் பத்மநாதப்புரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

we-r-hiring

இந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட தலை வர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

 

MUST READ