Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டுநர், நடத்துநர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஓட்டுநர், நடத்துநர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

-

 

bus

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இன்று மதியம் 01.00 மணி முதல் செப்டம்பர் 18- ஆம் தேதி மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதி அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுச் செய்யப்படுவர் என்று தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ