Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு

-

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Moss, dirt found in water tanks at govt schools: Survey : The Tribune India

விருதுநகர் அருகே உள்ளது சின்ன மூப்பன்பட்டி கிராமம் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையலர் முத்துச்செல்வி. இவர் நேற்று மாலை பாத்திரம் கழுவ பள்ளியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை திறந்துள்ளார். அப்போது தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

வலைவீச்சு

இதனையடுத்து அவர் போலீசார் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விசாரணையில் மர்மநபர்கள் யாரோ மாட்டுச்சாணத்தை தொட்டியில் கலந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்து குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது. சிமெண்ட் தொட்டி கட்டி அதை பாதுகாப்பாக மூடி வைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அங்கு புதிய சிமிண்ட் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணத்தை கலந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

MUST READ