இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் காலமானார். அவருக்கு வயது 86.
இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா பேராயர் எஸ்ரா சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் அனைருடன் நட்பு பாராட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு உடல்நல குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் வாடல்ஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில் இன்று மாலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இதனை அடுத்து, பேராயர் எஸ்ரா சற்குணத்தின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் வானகரம் ஜீசஸ் கால்ஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, பின்னர் அவரது நல்லடக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள பேராயர் எஸ்ரா சற்குணத்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


