முன்னாள் அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை நியமித்துள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், தேர்தல் பணிக்குழுவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.
அந்த குழுவில், தமிழ்மகன் உசேன், கேபி முன்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சிவி சண்முகம், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜூ, தனபால், கே.பி. அன்பழகன், காமராஜ், மணியன், கோகுல இந்திரா, சின்னசாமி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ,ஆர்.பி,உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், கருப்பசாமி பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், வேணுகோபால், சேவூர் ராமச்சந்திரன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, வைகைச்செல்வன், செல்வராஜ், மோகன், கமலக்கண்ணன், ராஜூ, விஜயகுமார், சிவபதி, சொரத்தூர் ராஜேந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், செல்லப்பாண்டியன், தாமோதரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
