spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி"?- முரசொலி கேள்வி!

“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

we-r-hiring

நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-

கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு கொல நடுக்கம் ஏற்படுவதாக முரசொலியில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல தயார் என்று என்றாவது சி.பி.சி.ஐ.டி. வாசலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தால், அவரை நம்பலாம் என்றும், ஆனால் அவரது பதற்றமே, அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடநாடு பற்றி யாரும் பேசக் கூடாது, அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது என்று சொல்ல இவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!

கொடநாடு வழக்கு விசாரணை சட்டப்படி தான் நடக்கிறது என்றும், அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும் என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ