Homeசெய்திகள்தமிழ்நாடு"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

-

 

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Photo: EPS

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனையின்றி மாநாட்டை நடத்தி அ.தி.மு.க. கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம்.

கவின், யுவன், இளன் கூட்டணியின் புதிய படம்…. டைட்டில் லுக் வெளியீடு!

அ.தி.மு.க. என்பது இனிமேல் ஒன்றுதான்; எங்கள் தரப்புதான் உண்மையான அ.தி.மு.க. அ.தி.மு.க. மாநாட்டைப் பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் தி.மு.க. மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அ.தி.மு.க. மாநாடிற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை தரவில்லை.

இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜயின் மகன்….. வெளியான புதிய தகவல்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மாநாட்டிற்கு பாதுகாப்பு எப்படி என்பதைப் பார்க்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ