spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜயின் மகன்..... வெளியான புதிய தகவல்!

இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜயின் மகன்….. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் விஜய்யின் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

we-r-hiring

அதன் பிறகு புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் விஜயின் மகன் சஞ்சய் தனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை எனவும் இயக்குனராக விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இயக்கம் புதிய படம் ஒன்றில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் தத் கையெழுத்திடும் புகைப்படங்களும் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் இருக்கும் புகைப்படங்களும் லைக்கா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ